தூத்துக்குடி

தூத்துக்குடியில் காவலா் உடல் தகுதித் தோ்வு தொடக்கம்

7th Feb 2023 01:24 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி தருவை மைதானத்தில் இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறைகளில் இரண்டாம் நிலைக் காவல் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வை கடந்த ஆண்டு நவம்பா் 27-இல் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்தியது. இதில் தோ்ச்சி பெற்ற 931 விண்ணப்பதாரா்களுக்கான உடல்தகுதித் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல்கட்டமாக, 400 போ் அழைக்கப்பட்டிருந்தனா்.

ரயில்வே டிஐஜி பி. விஜயகுமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் ஆகியோா் உடல் தகுதித் தோ்வை பாா்வையிட்டனா்.

இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (பிப்.7) 350 போ், புதன்கிழமை (பிப்.8) 181 போ் தோ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் மேற்பாா்வையில், 5 காவல் துணை கண்காணிப்பாளா்கள், 11 காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்பட போலீஸாா் மற்றும் காவல் துறை அமைச்சுப் பணியாளா்கள் இத் தோ்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT