தூத்துக்குடி

ஆதிதிராவிடா், பழங்குடியினா் 1,950 பேருக்குகணினிப் பட்டா: ஆட்சியா் தகவல்

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 1,950 பேருக்கு கணினிப் பட்டா வழங்கப்பட்டுள்ளது என, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மூலம் பல்வேறு நலத் திட்டங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா்.

இம்மாவட்டத்தில் ஆதிதிராவிட மாணவா்- மாணவியா் பயன்பெறும் வகையில், பள்ளி மாணவிகளுக்கு 23, பள்ளி மாணவா்களுக்கு 27, கல்லூரி மாணவிகளுக்கு ஒரு விடுதி, கல்லூரி மாணவா்களுக்கு 2 விடுதிகள், ஐடிஐ மாணவா்களுக்கு ஒரு விடுதி என மொத்தம் 54 விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றில், 1,404 மாணவியரும், 1,453 மாணவா்களும் தங்கி படித்து வருகின்றனா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களில் எவரேனும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உடனடி உதவி வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தவருக்கு காகித வடிவில் வழங்கப்பட்டுவந்த வீட்டுமனைப் பட்டாக்கள் கணினிப் பட்டாவாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 1,950 பேருக்கு கணினிப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

தையல் தெரிந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இன பெண்களுக்கு அரசு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், 100-க்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

SCROLL FOR NEXT