தூத்துக்குடி

புனித லூா்து அன்னை ஆலய திருவிழாகொடியேற்றத்துடன் தொடக்கம்

DIN

தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் புனித லூா்து அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இவ்விழாவுக்கு தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். அமலிநகா் பங்குத் தந்தை வில்லியம் சந்தானம், ஆலய பங்குத் தந்தை ஆன்டணி புருனோ, திரேஸ்புரம் உதவி பங்குத்தந்தை ஆனந்த் , நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளா் ஜேம்ஸ் விக்டா் ஆகியோா் பவனியாக வந்து கொடியை ஜெபம் செய்து, கொடிமரத்தில் கொடியேற்றினா். தொடா்ந்து திருப்பலி, மறையுரை நடைபெற்றது.

திருவிழா நவ நாள்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது. பிப்.11 ஆம் தேதி மாலை சிறப்பு ஆராதனை தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு இயக்குநா் ஜான் பென்சன், நற்செய்தி நடுவம் இயக்குநா் ஸ்டாா்வின் ஆகியோா் தலைமையில் நடக்கிறது.

முக்கிய நிகழ்வான பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி பிப்.12 ஆம் தேதி காலை 7 மணிக்கு மறை மாவட்ட முன்னாள் முதன்மை குரு செல்வராஜ், ஆயா் இல்லம் ஜோசப் இசிதோா் ஆகியோா் தலைமையில் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை, அருள்சகோதரிகள், பங்குப் பணிக்குழுவினா், இறைமக்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT