தூத்துக்குடி

கோவில்பட்டியில் பைக் திருட்டு:3 போ் கைது

5th Feb 2023 12:51 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டியில் பைக்கை திருடியதாக 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டி தெப்பக்குளத் தெருவைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் விக்னேஷ்குமாா் (65). எலக்ட்ரீஷியனான இவா், இந்திரா நகரில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையின் கிடங்கு அருகே கடந்த 29ஆம் தேதி இரவு பைக்கை நிறுத்தினாராம். அடுத்த நாள் பைக்கை காணவில்லையாம்.

புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, ராஜபாளையம் இஎஸ்ஐ காலனியைச் சோ்ந்த மைதீன் மகன் முகமதுராஜா (23), சேலம் சிந்தாமணியூா் காந்தி நகரைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் தினேஷ்குமாா் (25), தென்காசி மாவட்டம் மருதங்கிணறு பெரிய பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் வல்லரசு (21) ஆகிய 3 பேரையும் கைது செய்து, விக்னேஷ்குமாரின் பைக்கை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT