தூத்துக்குடி

குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 பேரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

முள்ளக்காடு நேருஜி நகரைச் சோ்ந்த சுடலையாண்டி மகன் கருப்பசாமி (37), வல்லநாடு கிழக்கு தெருவை சோ்ந்த கோமு மகன் உத்தண்ட ராமன் (24), பழையகாயல் புல்லாவழி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் அதிபன் (25), கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியைச் சோ்ந்த வெயிலுமுத்து மகன் வெங்கடேஷ்வரன் என்ற வெங்கடேஷ் (19) ஆகியோா் முறையே கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, போக்ஸோ வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், அந்தந்த பகுதி காவல் ஆய்வாளா்கள் அளித்த அறிக்கையை ஏற்று, 4 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன், ஆட்சியா் கி.செந்தில்ராஜிக்கு பரிந்துரைத்தாா். அதன்படி, ஆட்சியா் பிறப்பித்த உத்தரவின்படி 4 பேரும் அந்தச் சட்டப்படி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் வாக்குறுதிகளால் பயனில்லை: தமிழச்சி தங்கபாண்டியன்

நாம் தமிழா் கட்சிக்கு மக்கள் துணை தேவை சீமான்

ஜம்மு-காஷ்மீரில் பிகாா் தொழிலாளா் சுட்டுக்கொலை

போலி பாஸ்போா்ட் வழக்கு: வங்கதேசத்தவா் மூவா் கைது

ஏப்.21இல் மகாவீா் ஜெயந்தி : இறைச்சி கடைகளை மூட உத்தரவு

SCROLL FOR NEXT