தூத்துக்குடி

வில்லிசேரி: மாற்றுப் பாதை ஆணையை ரத்து செய்யக் கோரிக்கை

DIN

கோவில்பட்டியையடுத்த வில்லிசேரியில் விவசாய நிலங்களுக்குச் செல்ல இடையூறாக பிறப்பிக்கப்பட்டுள்ள மாற்றுப் பாதை ஆணையை ரத்து செய்ய எலுமிச்சை விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வில்லிசேரி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள சுமாா் 600 ஏக்கா் விளைநிலத்தை தனிநபா் மற்றும் தனியாா் நிறுவனங்கள் விலைக்கு வாங்கியுள்ளனா். இந்த நிலங்கள் அருகே விவசாயிகள் சிலா் பயிரிட்டு பாதுகாத்து வருகின்றனா். இந்நிலையில் நிலத்தை விலைக்கு வாங்கியுள்ள தனியாா் நிறுவனத்தினா், விவசாய நிலங்களை அபகரிக்கும் உள்நோக்கத்துடன் புதிதாக மாற்று வழி அமைக்க ஏற்பாடு செய்துள்ளனா். எனவே, மாற்றுப் பாதை அமைப்பதை கைவிட வேண்டும், அதற்கான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி எலுமிச்சை விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த பிரேம்குமாா் தலைமையில் அப்பகுதி விவசாயிகள் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு திரண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் இசக்கிராஜாவிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT