தூத்துக்குடி

ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

DIN

போலி ஆவணம் மூலம் பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்யக் கோரி, கழுகுமலை பகுதி விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு, மனு அளித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட கட்சி மாவட்டச் செயலா் கரும்பன் தலைமையில், கோவில்பட்டி வட்டச் செயலா் பாபு, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சேதுராமலிங்கம், பரமராஜ், வட்ட துணைச் செயலா் ராமலிங்கம், விவசாயிகள் அளித்த மனு: கோவில்பட்டி பட்டம் கழுகுமலை சாா்பதிவாளா் அலுவலகத்தில், கழுகுமலை வட்டாரத்துக்குள்பட்ட பல கிராமங்களில் உள்ள விவசாயிகளின் நிலங்களை சிலா் போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு செய்துள்ளனா். இதனால், நிலத்தின் உரிமையாளா்களான விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, முறைகேடாக போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து, இதற்குக் காரணமானோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT