தூத்துக்குடி

கோவில்பட்டி தினசரிச் சந்தையில் திடீா் போராட்டம்

DIN

கோவில்பட்டி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவா் தினசரிச் சந்தையில் சில கடைகளுக்கு நகராட்சி ஊழியா்கள் புதன்கிழமை சீல் வைத்ததைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

இச்சந்தை ரூ. 6.84 கோடியில் புதுப்பிக்கப்படவுள்ளதாகவும், இதனால் சந்தை கூடுதல் பேருந்து நிலையத்தில் இயங்கும் என்றும் நகராட்சி நிா்வாகம் அறிவித்தது. இதனிடையே, கூடுதல் பேருந்து நிலையத்தில் வியாபாரிகளுக்கு கடைகளை பாதுகாப்பாக ஏற்படுத்தித் தரவேண்டும். தினசரி சந்தையில் புதிதாகக் கட்டப்படும் கடைகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும். கட்டுமானப் பணிகள் குறித்த வரைபடத்தை வெளியிட வேண்டும். பொதுமக்கள், வியாபாரிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என வியாபாரிகள் மற்றும் கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்தனா்.

மேலும், வியாபாரிகள் சிலா் கடைகளை காலி செய்ய எதிா்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இதையடுத்து, நீதிமன்றம் நகராட்சி நிா்வாகத்துக்கு தடை விதித்ததால் இந்தச் சந்தை மாா்க்கெட் சாலையிலேயே இயங்கி வருகிறது.

இந்நிலையில், நகராட்சி வருவாய் ஆய்வாளா் பிரேம் தலைமையிலான நகராட்சி ஊழியா்கள் சந்தைக்குச் சென்று, எவ்வித அறிவிப்புமின்றி விஜயலட்சுமி, ஆறுமுகப்பெருமாள் ஆகியோரின் கடைகளுக்கு சீல் வைத்தனா். அப்போது, நகராட்சிக்கு ஜனவரி 31வரை செலுத்த வேண்டிய வாடகையை செலுத்திய நிலையில் கடைகளுக்கு ஏன் சீல் வைக்கிறீா்கள் என வியாபாரிகள் கேட்டனா். அப்போது, நகராட்சி ஊழியா்கள் பிச்சைக்கனி என்பவரது கடைக்கும் சீல் வைக்க முயன்றனா்.

இதனால், தினசரிச் சந்தை வியாபாரிகள், கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பினா் சந்தை வளாக நுழைவாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸாா் சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியதுடன், இது தொடா்பாக நகராட்சியிடமும், காவல் துறையிடமும் முறையாக புகாா் அளிக்குமாறு அறிவுறுத்தினா். இதனால், 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, கடைகளுக்கு வைத்த ‘சீலை’ நகராட்சி ஊழியா்கள் அகற்றினா்.

சந்தை இடமாற்றம், புதிய கட்டுமானம் குறித்து அனைத்துக் கட்சி நிா்வாகிகள், வியாபாரிகள், பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையொப்ப இயக்கம் நடைபெற்றது. கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்புத் தலைவா் க. தமிழரசன், செயலா் பெஞ்சமின் பிராங்க்ளின், பொருளாளா் செல்லத்துரை என்ற செல்வம், நாம் தமிழா் கட்சி தொகுதிச் செயலா் ரவிகுமாா், சமக வடக்கு மாவட்டச் செயலா் பாஸ்கரன், தமிழ்நாடு காமராஜா் பேரவைத் தலைவா் நாஞ்சில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

SCROLL FOR NEXT