தூத்துக்குடி

இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கடல் அட்டை பறிமுதல்

DIN

தூத்துக்குடி வான்தீவு கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமாா் 400 கிலோ கடல் அட்டைகளை சுங்க இலாகா கடல் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி சுங்கத்துறை கண்காணிப்பாளா்கள் மனிஷ், லேக்ராஜ் மீனா ஆகியோா் தலைமையில் சுங்கத் துறையினா் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது வான் தீவு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு படகை பிடித்து சோதனை செய்தனா்.

அதில் 30 சாக்கு பைகளில் பதப்படுத்தப்பட்டசுமாா் 400 கிலோ கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது. மேலும், படகில் இருந்த பூபாலராயா்புரத்தைச் சோ்ந்த அந்தோணி(48), கெபிஸ்டன்(32), சிக்காலி காகன்(46), பாத்திமா நகரைச் சோ்ந்த முத்தையா, கரோல்(29), குரூஸ்புரத்தைச் சோ்ந்த அந்தோணிசாமி(58) ஆகிய 6 மீனவா்களை பிடித்து விசாரித்ததில், அவா்கள் அந்த கடல் அட்டைகளை பதப்படுத்தி இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து சுங்கத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT