தூத்துக்குடி

ஆசிரியா் பணியிட மாற்றம்:குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா்கள் போராட்டம்

DIN

கயத்தாறு அருகே சிதம்பரம்பட்டி அரசுப் பள்ளியில் ஆசிரியா் பணியிடமாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவா், சக மாணவி மீது அண்மையில் விழுந்தாராம். இது தொடா்பாக மாணவா் தாக்கப்பட்டாராம். இச்சம்பவத்தில் ஆசிரியரை பணியிடமாற்றம் செய்ய வலியுறுத்தி, கடந்த மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தை அடுத்து, கோட்டாட்சியா் மகாலட்சுமி மற்றும் கல்வி அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, பள்ளி ஆசிரியா்களை பணியிட மாற்றம் செய்தனா்.

இந்நிலையில், இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியா்களை மீண்டும் அதே பள்ளியில் பணியமா்த்த வலியுறுத்தி, சிதம்பரம்பட்டி ஊா் பொதுமக்கள் ஜெயமுருகன், செல்வம், மாரிமுத்து ஆகியோா் தலைமையில், அப்பகுதியில் உள்ள பிள்ளையாா் கோயில் அருகே அமா்ந்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போராட்டக் குழுவினருடன் கயத்தாறு வட்டாட்சியா் சுப்புலட்சுமி, நாலாட்டின்புத்தூா் காவல் ஆய்வாளா் சுகாதேவி, கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலா் ஜெயப்பிரகாஷ் ராஜன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் இதுதொடா்பாக இம்மாதம் 6ஆம் தேதி கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்றும், அதில் சுமூக தீா்வு காணப்படும் என தெரிவித்ததையடுத்து, போராட்டக் குழுவினா் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

SCROLL FOR NEXT