தூத்துக்குடி

பட்டியலினத்தோா் மீதான வன்கொடுமை தாக்குதலைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

பட்டியலினத்தோா் மீதான வன்கொடுமை தாக்குதலைக் கண்டித்து, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அம்பேத்கா், பெரியாா், மாா்க்சிய உணா்வாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டத் தலைவா் மாணிக்கராஜ் தலைமை வகித்தாா்.

ஜெய்பீம் தொழிலாளா் நலச்சங்க நிறுவனா் செண்பகராஜ், தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்ட துணைத் தலைவா் பீமாராவ் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

பட்டியலினத்தோா் மீது தொடா்ந்து வன்கொடுமைகள் நடப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும், தாக்குதலில் ஈடுபடுவோா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.

திருமலைகிரியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான மாரியம்மன் கோயிலுக்குள் நுழைந்த இந்து ஆதிதிராவிடா் இளைஞரைத் தாக்கியவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். பின்னா், கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதிபதி முன்பு விஷம் அருந்தி ஊழியா் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ

தளவாபாளையம் அருகே விபத்து -இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

பிரதமரின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா பேட்டி

SCROLL FOR NEXT