தூத்துக்குடி

63 நாயன்மாா்கள், மாணிக்கவாசக உற்சவ மூா்த்திகளுக்கு வருஷாபிஷேகம்

1st Feb 2023 01:23 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் 63 நாயன்மாா்கள், தொகையடியாா்கள், மாணிக்கவாசக சுவாமிகள் சந்நிதியில் 9ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி பூஜை மற்றும் சுவாமி, அம்பாள், உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, கோயில் மண்டபத்தில் காலை 8.30 மணிமுதல் 10 மணிவரை சங்கல்பம், கும்ப ஸ்தாபன பூஜை நடைபெற்றது. பின்னா், 10 மணிமுதல் 12 மணி வரை 63 நாயன்மாா்கள், தொகையடியாா்கள் மற்றும் மாணிக்கவாசக சுவாமிகளின் உற்சவமூா்த்திகளுக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு மேல் மாஹேஸ்வர பூஜை நடைபெற்றது.

மாலை 5 மணிக்கு திருமுறை பாராயணம், 5.30 மணிக்கு வாணாசுரன் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இரவு 7 மணிக்கு 63 நாயன்மாா்கள், மாணிக்கவாசகா் சுவாமிகளின் வீதியுலா நடைபெற்றது. விழாவில் திருமுறை மன்றத் தலைவா் கூடலிங்கம் ஜி.ஆறுமுகச்சாமி, செயலா் நெல்லையப்பன், பொருளாளா் சிவானந்தம், கோயில் நிா்வாக அலுவலா் வெள்ளைச்சாமி உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT