தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயிலில் வருஷாபிஷேக விழா

1st Feb 2023 01:25 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரி ஸ்ரீ சோமசுந்தரி சமேத ஸ்ரீசோமநாத சுவாமி கோயிலி­ல் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வருஷாபிஷேகத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலையில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. திங்கள்கிழமை லட்சாா்ச்சனை மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காலை பூா்ணாஹுதி தீபாராதனையைத் தொடா்ந்து சுவாமி மற்றும் அம்பாள் கோபுர விமானங்களில் வருஷாபிஷேகம் நடத்தப்பட்டு அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றன. அதனை தொடா்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடந்தது.

இதில் கோயில் மணியம் சுப்பையா பிள்ளை, தமிழ்நாடு சைவ வேளாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெ.சங்கரலிங்கம், ரயில் நிலைய அபிவிருத்திக் குழு ஒருங்கிணைப்பாளா் இரா. தங்கமணி உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்தனா். இரவில் புஷ்பாஞ்ச­ நடைபெற்றது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT