தூத்துக்குடி

கொட்டும் மழையில் காங்கிரஸ் நிா்வாகி நூதன போராட்டம்

26th Apr 2023 05:34 AM

ADVERTISEMENT

கந்துவட்டி வழக்குகள் தொடா்பான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி நிா்வாகி கொட்டும் மழையில் செவ்வாய்க்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டாா்.

கந்துவட்டி வழக்குகள் தொடா்பான விசாரணைக்கு தனி சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து விரைந்து நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கந்துவட்டி தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட முன்னாள் துணைத் தலைவா் அய்யலுசாமி, கழுத்தில் காசோலைகள், புரோ நோட்டுகளை மாலையாக அணிந்தபடி கொட்டும் மழையில் தரையில் அமா்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டாா்.

பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் அளித்தாா். கொட்டும் மழையிலும் இப்போராட்டம் சுமாா் அரை மணி நேரம் நீடித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT