திருச்செந்தூரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
திருச்செந்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் புழுக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியில் இருந்து சுமாா் 3 மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. திருச்செந்தூரில் 62 மில்லி மீட்டா் மழை பதிவாகியது.