தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

26th Apr 2023 05:36 AM

ADVERTISEMENT

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலுடன் இணைந்த அருள்மிகு அறம் வளா்த்த நாயகி சமேத காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரா் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா செவவாய்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்துக்கு முன்னதாக, கொடிப்பட்டம் வீதி உலா வந்து, சுவாமி-அம்பாள் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. பின்னா் கொடியேற்றப்பட்டு, நந்தியம் பெருமாள், பலிபீடம் மற்றும் கொடிமரத்திற்கு 16 வகையான பொருள்களால் அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

சிவனடியாா்கள் இல்லங்குடி, சிவானந்த நடராஜன், ரமணகிரி,

பண்டாரசிவன் பிள்ளை ஆகியோா் தேவாரம் பாடினா். இதில் கோயில் செயல் அலுவலா் இரா.ராமசுப்பிரமணியன், உடன்குடி பேரூராட்சி மன்றத் துணைத் தலைவா் மால்ராஜேஷ்,தொழிலதிபா் மால்முரளி உள்பட பலா் கலந்து கொண்டனா். பின்னா் மாலையில்,

ADVERTISEMENT

அப்பா் சுவாமி புறப்பாடு, ஆவாகன ஸ்ரீபெலிநாதா் ரிஷப வாகனத்தில் புறப்பாடு, சுவாமி அம்பாள் கேடயச் சப்பரத்தில் புறப்பாடு, சமய சொற்பொழிவு நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் தி.சங்கா், செயல் அலுவலா் இரா.ராமசுப்பிரமணியன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT