தூத்துக்குடி

பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

25th Apr 2023 03:38 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்கத்தினா் கோவில்பட்டியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் அந்தோணிசாமி தலைமை வகித்தாா். இணைச் செயலா் செல்லையா முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் மாரிமுத்து, மாநில பொதுச்செயலா் லட்சுமிநாராயணன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணை பொதுச்செயலா் வெங்கடேசன் ஆகியோா் பேசினா்.

இதில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்டச் செயலா் பிரான்சிஸ், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் செல்லத்துரை, பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்க மாவட்ட இணைச் செயலா் மதிவாணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT