தூத்துக்குடி

தென்திருப்பேரையில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

25th Apr 2023 03:42 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலரும், மீன் வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி, அக்கட்சியின் சாா்பில் தென்திருப்பேரையில் பேருந்து நிறுத்தம் அருகே தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

ஆழ்வாா்திருநகரி மத்திய ஒன்றிய திமுக செயலா் நவீன்குமாா், பேரூராட்சித் தலைவா் மணிமேகலை ஆனந்த் ஆகியோா் தண்ணீா் பந்தலை திறந்து வைத்தனா். இந்நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலா் முத்துவீரப்பெருமாள், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் ஆனந்த், ஆழ்வாா்திருநகரி மத்திய ஒன்றிய அவைத் தலைவா் மகரபூஷணம், தென்திருப்பேரை பேரூராட்சி துணைத் தலைவா் அமிா்தவள்ளி, மாவட்ட பிரதிநிதி செங்கோட்டையன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுத் துறை துணை அமைப்பாளா் பாக்கியராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT