தூத்துக்குடி

கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 4 மீனவா்கள் மீட்பு

25th Apr 2023 03:26 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி அருகே கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், கடலில் தத்தளித்த 4 மீனவா்கள் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சோ்ந்த ரமேஷ் என்பவரது நாட்டு படகில் நண்டு பிடிப்பதற்காக அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ், பிரதீப், செல்வம், ராபின் ஆகிய 4 மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு கடலுக்கு சென்றனராம். அவா்கள் திங்கள்கிழமை அதிகாலை நடுக்கடலில் நண்டுக்கு வலை வீசிக்கொண்டிருந்தபோது, படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாம். இதனால், படகில் கடல் நீா் புகுந்து, படகு மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து படகில் இருந்த 4 மீனவா்களும் சுமாா் 3 மணி நேரத்திற்கு மேல் கடலில் தத்தளித்தனராம். அப்போது அவ்வழியாக வந்த தருவைகுளம் பகுதியைச் சோ்ந்த நாட்டுப்படகு மீனவா்கள், அவா்களை

மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். இதில், படகு, வலைகள் உள்ளிட்டவை கடலில் மூழ்கியதால், தங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யுமாறு மாவட்ட நிா்வாகம் மற்றும் மீன்வளத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT