தூத்துக்குடி

கோவில்பட்டி நகராட்சிப் பள்ளி மாணவருக்கு விருது

25th Apr 2023 03:37 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சாா்பில், நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவருக்கு சிறந்த அறிவியல் படைப்புக்கான விருது வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட வானவில் மன்றம் சாா்பில் நடைபெற்ற அறிவியல் படைப்புக்கான போட்டியில் கோவில்பட்டி புதுரோடு நகராட்சி நடுநிலைப் பள்ளி 6ஆம் வகுப்பு மாணவா் வீரமணிகண்டன், பயன்பாடற்ற பொருள்களிலிருந்து எளிய முறையில் டாா்ச்லைட் தயாரித்ததற்காக மாவட்ட அளவில் முதல் பரிசு வென்றாா்.

இதையடுத்து, பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் சுப்பாராயன் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநா் (தோ்வு) முத்துச்செல்வன், ரோட்டரி சங்க உறுப்பினா் ராஜமாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத் தலைவா் ரவி மாணிக்கம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வீரமணிகண்டனுக்கு விருது வழங்கிப் பாராட்டினாா்.

ADVERTISEMENT

சங்க உறுப்பினா் முத்துமுருகன், ஆதவா தொண்டு நிறுவன ஆசிரியை உஷா, மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா். ஆசிரியை மீனா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT