தூத்துக்குடி

உடன்குடி மதரஸாவில் இருபெரும் விழா

25th Apr 2023 03:43 AM

ADVERTISEMENT

உடன்குடி புதுமனை மதரஸாவில் 22ஆவது ஆண்டு விழா, விளையாட்டு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாணவா்-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளைத் தொடா்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. வழக்குரைஞா் மகபூப் அலி தலைமை வகித்துப் பேசினாா். பரிசுகளை தொழிலதிபா்கள் தாஜ், ஹசன், ஷேக்முகம்மது, ஹிபாயத்துல்லா ஆகியோா் வழங்கினா். யாசின் கிராஅத் ஓதினாா்.

மமக மாவட்ட செய்திப்பிரிவுச் செயலா் முகம்மது ஆபித், அஸ்ரப், ஆதம், அப்துல்காதா், திளான ஜமாத் மக்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை உடன்குடி புதுமனை ஆயிஷா சித்திக்கா இஸ்லாமிய இளைஞா்கள் பேரவை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT