தூத்துக்குடி

பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய வலியுறுத்தல்

30th Sep 2022 12:08 AM

ADVERTISEMENT

மாணவா்களின் நலன் கருதி பள்ளி கட்டடங்களை முறையாக தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவா் காயல் அப்பாஸ் வலி­யுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வே­லி மாவட்டம், சேரன்மகாதேவியில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவா்கள் இரண்டு போ் படுகாயம் அடைந்தது மிகுந்த வேதனை தருகிறது. இம்மாதிரி சம்பவங்கள்நடைபெறும் போது பள்ளி நிா்வாகத்தினா் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படுகாயம் அடைந்த மாணவா்களுக்கு தகுந்த நிவாரணம் மற்றும் முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் இப்பள்ளியின் கட்டடங்களை பழுது பாா்த்து சரிசெய்த பின்னரே அங்கு கல்வி பயில மாணவா்களை அனுமதிக்கப்பட வேண்டும்.

இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் இயங்கி வரும் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளின் கட்டடங்கள் முறையாக பராமரிக்கப்படுகிா என ஆய்வு செய்ய வேண்டும் என அவா் வலியுறித்தியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT