தூத்துக்குடி

ஆத்தூரில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம்

30th Sep 2022 12:08 AM

ADVERTISEMENT

ஆத்தூா் பேரூராட்சியில் குழந்தைகள் நல பராமரிப்பு, பாதுகாப்புக் குழு தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட சமூகப் பாதுகாப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவை சாா்பில் இக்கூட்டம் நடைபெற்றது. ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் கமாலுதீன் தலைமை வகித்தாா்.

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பிரதிநிதி கிளாரன்ஸ், ஆத்தூா் காவல் உதவி ஆய்வாளா் மாணிக்கராஜ், பேரூராட்சி துணைத் தலைவா் மகேஸ்வரி , ஆத்தூா் சுகாதார ஆய்வாளா் சங்கரசுப்பிரமணியன், வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT