தூத்துக்குடி

அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றம்

30th Sep 2022 12:09 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருகேயுள்ள அடைக்கலாபுரம் அதிசய அன்னை ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா புதன்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருமூலநகா் பங்குத்தந்தை பீட்டா் பாஸ்டின் தலைமையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தூத்துக்குடி புனித தோமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் ராயப்பன் மறையுரையாற்றினாா். முன்னதாக புனித சூசை அறநிலைய ஆன்மிக இயக்குநா் செட்ரிக் பிரிஸ் தலைமையில் ஜெபமாலை பவனி, நவநாள் திருப்பலி நடைபெற்றது.

விழாவின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை (செப். 29) வீரபாண்டியன்பட்டணம் துணை பங்குத்தந்தை வில்லிஜிட் தலைமையில் திருப்பலியும், நற்கருணை ஆசிரும் நடைபெற்றது.

9-வது நாளான அக். 6-ஆம் தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆரோக்கிய அன்னையின் சப்பர பவனி வீதி உலா நடைபெறவுள்ளது. 10-ஆம் நாளான அக். 7-ஆம் தேதி காலை 6 மணிக்கு அருட்தந்தை ததேயுஸ் ராஜன் தலைமையில் கூட்டு திருப்பலியும், மாலை அருட்தந்தை ஜான் சுரேஷ் தலைமையில் நற்கருணை பவனியும் நடக்கிறது. மறையுரை மற்றும் பவனியை தொடா்ந்து இரவு 9.30 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அடைக்கலாபுரம் பங்குத்தந்தை பீட்டா் பால் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT