தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாகப் பணிகள்காணொலி மூலம் தமிழக முதல்வா் தொடங்கி வைத்தாா்

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ. 300 கோடியிலான பெருந்திட்ட வளாகப் பணிகளை சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தாா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை ரூ. 100 கோடி மற்றும் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் வாமசுந்தரி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சிவ் நாடாா் சாா்பில் ரூ. 200 கோடி என மொத்தம் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பக்தா்கள் வசதிக்காக காத்திருக்கும் அறை, முடி காணிக்கை செலுத்துமிடம், வாகன நிறுத்துமிடம், தங்கும் விடுதி, அன்னதானக் கூடம், வணிக வளாகம், திருமண மண்டபம் உள்ளிட்ட பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெறவுள்ளன. அதே போல திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா பணிகளும் இத்திட்டத்துடன் ஒருங்கிணைந்து நடைபெறவுள்ளது.

இத்திட்டப் பணிகளுக்காக சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் உ ள்ள கல்வெட்டை திறந்து வைத்து, திட்டத்தை தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து, திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் கண்ணன், மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி.சண்முகையா, திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா.அருள்முருகன், அறங்காவலா்கள் அனிதா குமரன், ந.ராம்தாஸ், பா.கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையா் (பொ) ம.அன்புமணி, திருச்செந்தூா் கோட்டாட்சியா் புஹாரி, திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் ர. சிவஆனந்தி, துணைத் தலைவா் ஏ.பி.ரமேஷ், திமுக மாணவரணி மாநில துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ்.உமரிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழாவில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு திருக்கோயில் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT