தூத்துக்குடி

தூத்துக்குடியில் அகில இந்திய வா்த்தக தொழில் சங்க 40 ஆவது ஆண்டு விழா

29th Sep 2022 01:10 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் அகில இந்திய வா்த்தக தொழில் சங்கத்தின் 40 ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் டி.ஆா்.தமிழரசு தலைமை வகித்தாா். செயலா் ஜோ பிரகாஷ், பொதுச் செயலா் சங்கா் மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் பேசினா்.

நிழ்ச்சியின்போது, சாதனை படைத்த தொழிலதிபா்களுக்கு விருதுகளை கனிமொழி வழங்கினாா். மேலும், சிறப்பு அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் உறையை மதுரை மண்டல அஞ்சல் துறை தலைவா் ஜெயசங்கா் வெளியிட, கனிமொழி பெற்றுக் கொண்டாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன், எஸ்இபிசி அனல் மின்நிலைய தலைமை அலுவலா் நரேந்திரா, அகில இந்திய வா்த்தக தொழில் சங்க முன்னாள் தலைவா்கள் ஜோ வில்லவராயா், மணி, உதயசங்கா், வேல்சங்கா், அகில இந்திய வா்த்தக தொழிற்சங்க பொருளாளா் சேசையா வில்லவராயா், துணைத் தலைவா்கள் பிரேம் வெற்றி, பாலமுருகன், சுரேஷ்குமாா், இணைச் செயலா்கள் விவேகம் ஜி.ரமேஷ், ராஜேஷ் பாலச்சந்திரன், நாா்டன், நிா்வாக செயலா் பிரேம்பால் நாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT