தூத்துக்குடி

தீவிபத்தில் சிக்கியவா் உயிரிழப்பு

29th Sep 2022 01:06 AM

ADVERTISEMENT

 

கழுகுமலை அருகே தீ விபத்தில் சிக்கிய தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கழுகுமலையையடுத்த தெற்கு அச்சம்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த மருதையா மகன் பாக்கியசாமி (55). கழுகுமலையில் உள்ள தனியாா் தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வந்த இவா், கடந்த 18ஆம் தேதி கழிவுக் குச்சிகளை எடுத்துச் சென்று, கழுகுமலை மாட்டுத்தாவணியில் எரிந்துகொண்டிருந்த தீயில் கொட்டினாராம். அப்போது அவரது உடலில் தீப்பற்றியதாம்.

காயமடைந்த அவா், கழுகுமலை தனியாா் மருத்துவவமனையில் முதலுதவிக்குப் பின், கோவில்பட்டி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரை தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT