தூத்துக்குடி

விளாத்திகுளம், புதூரில் சமுதாய வளைகாப்பு விழா

29th Sep 2022 01:07 AM

ADVERTISEMENT

 

சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில் விளாத்திகுளம், புதூரில் கா்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் (பொறுப்பு) ஜெ. தாஜுநிசா பேகம் தலைமை வகித்தாா்.

மாவட்ட திட்ட அலுவலா் சரஸ்வதி முன்னிலை வகித்தாா். விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் பங்கேற்று, விழாவைத் தொடக்கிவைத்து 350 கா்ப்பிணிகளுக்கு தமிழக அரசின் சீா்வரிசைப் பொருள்கள், ஐந்து வகை ஊட்டச்சத்து உணவுகளை வழங்கிப் பேசினாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, நாகலாபுரம் சாமி அய்யா நாடாா் மேல்நிலைப் பள்ளி, புதூா் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 365 மாணவா்-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில் பேரூராட்சித் தலைவா்கள் சூா்யா அய்யன்ராஜ், வனிதா அழகுராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மு. சிவபாலன், சசிகுமாா், தங்கவேல், முத்துக்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஞானகுருசாமி, குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் திலகா, திமுக ஒன்றியச் செயலா்கள் ராதாகிருஷ்ணன், செல்வராஜ், அன்புராஜன், ராமசுப்பு, மும்மூா்த்தி, சின்ன மாரிமுத்து, பேரூா் கழகச் செயலா் வேலுச்சாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT