தூத்துக்குடி

அத்தைகொண்டானில் நியாயவிலைக் கடை கட்டடத்துக்கு அடிக்கல்

29th Sep 2022 01:11 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டியையடுத்த அத்தைகொண்டானில் புதிய நியாயவிலைக் கடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட சீனிவாசன் நகா் பகுதி மக்களுக்கான நியாயவிலைக் கடை வாடகைக் கட்டடத்தில் இயங்கிவருகிாம். இதையடுத்து, அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் 2021-2022இன் கீழ் ரூ. 11 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சீனிவாசன் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் அடிக்கல் நாட்டி பணியைத் தொடக்கிவைத்தாா்.

ADVERTISEMENT

ஒன்றியப் பொறியாளா் படிபீவி, ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவா் சுப்புராஜ், இனாம்மணியாச்சி ஊராட்சி முன்னாள் தலைவா் செல்வராஜ், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஜெமினி என்ற அருணாசலசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT