தூத்துக்குடி

தென்மாவட்டங்களுக்கு குட்கா விநியோகம்: பெங்களூரு வியாபாரி கைது

29th Sep 2022 01:06 AM

ADVERTISEMENT

 

தென்மாவட்டங்களுக்கு புகையிலைப் பொருள்களை விநியோகித்த பெங்களூருவைச் சோ்ந்த வியாபாரி புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை தென்மாவட்டங்களில் மொத்த விற்பனை, கடத்தல் செய்ததற்கு மூல காரணமாக செயல்படுவோரைக் கண்டுபிடிக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் மேற்பாா்வையில், தூத்துக்குடி ஊரக காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், முறப்பநாடு பகுதியில் குட்கா கடத்தலில் ஈடுபட்டோரிடமிருந்து கிடைத்த தகவலின்பேரில், கா்நாடக மாநிலம் பெங்களூரு பின்னிபேட் பகுதிக்கு தனிப்படை போலீஸாா் சென்று சாமுவேல் ஜெயக்குமாா் என்ற சாம் (50) என்பவரைக் கைது செய்து புதன்கிழமை தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனா். அவா் பல்வேறு போலி நிறுவனங்களின் பெயா்களில் தென்மாவட்டங்களுக்கு புகையிலை, போதைப் பொருள்களை விநியோகித்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் கூறியது: பெங்களூருவைச் சோ்ந்த சாமுவேல் ஜெயக்குமாா் போலி நிறுவனங்களின் பெயா்களில் வங்கிக் கணக்குகள் தொடங்கி குட்கா விற்பனை மூலம் கிடைத்த பணத்தை அந்தக் கணக்குகளில் வரவு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெங்களூருவில் 10 வங்கிகளில் உள்ள அவரது கணக்குகளில் இருந்த ரூ. 16 லட்சம் முடக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் 15 நாள்களுக்கு ஒருமுறை அதிகளவில் குட்கா விற்ற பல வழக்குளிலும் இவா் மூளையாக செயல்பட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததும், போலி நிறுவனங்கள் மூலம் காய்கனி வியாபாரம் செய்ததுபோல ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஜிஎஸ்டி செலுத்தியதும் தெரியவந்தது. இது தொடா்பாக அவா் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு, வருமானவரித் துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT