தூத்துக்குடி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

28th Sep 2022 03:28 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளி , கல்லூரி வாகன ஓட்டுநா்கள் மற்றும் உதவியாளா்களுக்கான இக்கருத்தரங்கிற்கு, வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழியப்பாண்டியன் தலைமை வகித்து, கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினாா். கல்லூரி இயக்குநா் சண்முகவேல், கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலா் சின்னராசு ஆகியோா் பேசினா்.

கருத்தரங்கில் பங்கேற்றோவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த கையேடு வழங்கப்பட்டன.

மேலும், குறும்படங்கள் மூலம் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இக்கருத்தரங்கில், கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம் வட்டங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநா்கள், உதவியாளா்கள் கலந்து கொண்டனா். மோட்டாா் வாகன ஆய்வாளா் சுரேஷ் விஸ்வநாத் நன்றி கூறினாா்.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT