தூத்துக்குடி

விஷமருந்திய பெண் உயிரிழப்பு

28th Sep 2022 03:27 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி அருகே விஷமருந்திய பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டியையடுத்த இடைசெவல் காலனி தெரு கருப்பசாமி மனைவி சமுத்திரகனி(50). நோயினால் பாதிக்கப்பட்ட இவரது மகள், கடந்த 6 மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டாராம். இந்நிலையில் சமுத்திரக்கனி, இம்மாதம் 21 ஆம் தேதி வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டாராம்.

இதையறிந்த அவரது உறவினா்கள், அவரை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT