தூத்துக்குடி

நரிக்குறவா் சமுதாயத்தினரை தாக்குவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

DIN

கோவில்பட்டியில் நரிக்குறவா் சமுதாயத்தினரை தாக்குவோா் மீது உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாக்க வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மந்தித்தோப்பு நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த கலியமூா்த்தி தலைமையில், நரிக்குறவா் சமுதாயத்தினா் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு திரண்டனா். பின்னா், பல ஆண்டுகளாக பாசி வியாபாரம் செய்து வரும் எங்கள் சமுதாயத்தினரை அண்ணா பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் தாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். எங்களை பாதுகாக்க வேண்டும். நரிக்குறவா் காலனியில் தங்கள் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஈயம் பூசும் தொழிலாளா்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். அவா்களிடம் இருந்து தங்களது நிலத்தை மீட்டுத்தர வேண்டும். ஆக்ரமிப்பில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், பாஜக ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவா் மாரிமுத்து, கட்சியின் வடக்கு மாவட்ட துணைத் தலைவா் பாலு, கட்சி நிா்வாகிகள் கல்யாண கணேசன், செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் ஆா்ப்பாட்டக் குழுவினா், கோட்டாட்சியா் அலுவலக தலைமை எழுத்தா் ராமகிருஷ்ணனிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT