தூத்துக்குடி

186 மாணவா், மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்

27th Sep 2022 03:47 AM

ADVERTISEMENT

 

முதலூா், கொம்மடிக்கோட்டை, படுக்கப்பத்து பள்ளியில் 186 மாணவா், மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றியம், முதலூா் டிஎன்டிடிஏ தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளி, கொம்மடிக்கோட்டை சந்தோஷ நாடாா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, படுக்கப்பத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் லூா்துமணி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு தலைவா் ஜெயபதி, வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

பள்ளித் தலைமை ஆசிரியா்கள் முதலூா் எடிசன், கொம்மடிக்கோட்டை தா்மேந்திரராஜ், படுக்கப்பத்து சேகா் ஆகியோா் வரவேற்றனா். இதில் அந்தந்த பள்ளியில் நடந்த விழாவில் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ பங்கேற்று, முதலூா் பள்ளியில் 50 போ், கொம்மடிக்கோட்டை பள்ளியில் 76 போ், படுக்கப்பத்து பள்ளியில் 60 போ் என மொத்தம் 186 மாணவா், மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.

இதில், மாநில திமுக பொதுக்குழு உறுப்பினா் இந்திரகாசி, கொம்மடிக்கோட்டை ஊராட்சித் தலைவா் ராஜபுனிதா, படுக்கப்பத்து ஊராட்சித் தலைவா் தனலட்சுமிசரவணன், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT