தூத்துக்குடி

பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி கைது

27th Sep 2022 03:47 AM

ADVERTISEMENT

 

கடம்பூா் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கடம்பூரையடுத்த தங்கம்மாள்புரம் தெற்கு தெருவைச் சோ்ந்த சுதந்திரராஜ் மனைவி சரஸ்வதி(43). இவா், அதே பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டின் முன்பு சனிக்கிழமை நின்று கொண்டிருந்தாராம். அப்போது, பைக்கில் வந்த

தங்கம்மாள்புரம் காலனியைச் சோ்ந்த சிவன் மகன் அய்யனாா், சரஸ்வதியை சாலையோரமாக நிற்கமாட்டாயா என அவதூறாகப் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த சரஸ்வதி, கடம்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கூலித் தொழிலாளி அய்யனாரை(40) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT