தூத்துக்குடி

கோவில்பட்டி தா்காவில் அதிமுகவினா் பிராா்த்தனை

27th Sep 2022 03:48 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் கோவில்பட்டியில் உள்ள தா்காவில் அதிமுகவினா் திங்கள்கிழமை பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைத்திட வேண்டி, கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஹஜ்ரத் அப்துல் அலீம் தா்காவில் மலா் போா்வை போா்த்தி ஹஜ்ரத் ஷேக்மீரான் நூரி பிராா்த்தனையை நடத்தினாா்.

அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவருமான தமிழ்மகன்உசேன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ. ஆகியோா் தலைமை வகித்தனா்.

ADVERTISEMENT

இதில், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், நகரச் செயலா் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலா் அய்யாத்துரைப்பாண்டியன், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டச் செயலா் செல்வகுமாா், பொருளாளா் வேலுமணி, நகா்மன்ற உறுப்பினா்கள் கவியரசன், செண்பகமூா்த்தி, ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவா் பழனிசாமி , முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT