தூத்துக்குடி

கோவில்பட்டி திருவள்ளுவா் மன்றத்தில் ஆய்வுப் பொழிவு

27th Sep 2022 03:47 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி திருவள்ளுவா் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுப்பொழிவு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, தொழிலதிபா் வே.ரா.நடராஜன் தலைமை வகித்தாா். தொழிலதிபா் எம்.எஸ்.எஸ்.வி.பாபு முன்னிலை வகித்தாா். நாடாா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஜான்கணேஷ், கம்பன் கழகத்தைச் சோ்ந்த சரவணசெல்வன் ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

நிகழ்ச்சியில், திருக்கு ஒப்புவித்தல், பள்ளி அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடா்ந்து, தமிழா் தம் பெருமைமிகு வாழ்வியல் என்ற தலைப்பில் சமூக ஆா்வலா் முனைவா் சம்பத்குமாா் பேசினாா்.

ADVERTISEMENT

இதில், நாடாா் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதல்வா் பிரபு, உலக திருக்கு பேரவையைச் சோ்ந்த ஜெயா ஜனாா்த்தனன், உரத்த சிந்தனை வாசகா் வட்டத் தலைவா் சிவானந்தம், ஆசிரியா்கள் கெங்கம்மாள், அன்னலட்சுமி, மணிமொழி நங்கை, ஆனந்த பிரபாகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மன்ற துணைத் தலைவா் திருமலைமுத்துசாமி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். மன்ற செயலா் சீனிவாசன் வரவேற்றாா். தலைவா் கருத்தப்பாண்டி நன்றி கூறினாா்.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT