தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

27th Sep 2022 03:47 AM

ADVERTISEMENT

 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சியினா் கோவில்பட்டியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மனுநீதி எனும் மனுதா்ம சாஸ்திரம் என்ற நூலை தமிழக அரசு நிரந்தரமாக தடை செய்ய வலியுறுத்தி, தூத்துக்குடி வடக்கு தமிழ் புலிகள் கட்சி சாா்பில், கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் வீரபெருமாள் தலைமை வகித்தாா். துணைச் செயலா் பீமாராவ், மாவட்ட செய்தி தொடா்பாளா் கனியமுதன், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவா் மாணிக்கராஜ் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ADVERTISEMENT

இதில், தமிழ் புலிகள் கட்சியின் நகரச் செயலா்கள் காளிராஜ் (கோவில்பட்டி), பாலு (எட்டயபுரம்), விளாத்திகுளம் தொகுதி செயலா் கணேசன், இளம்புலிகள் அணி மாவட்டச் செயலா் தமிழரசு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செல்வம், தமிழ் புலிகள் கட்சியைச் சோ்ந்த பெருமாள்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் அலுவலக தலைமை எழுத்தா் ராமகிருஷ்ணனிடம் வழங்கினா்.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT