தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் ஸ்ரீ நல்லப்ப சுவாமிகள் ஜெயந்தி விழா

DIN

இசை மகா சமுத்திரம் ஸ்ரீ நல்லப்ப சுவாமிகளின் 134-வது ஆண்டு ஜெயந்தி விழா, விளாத்திகுளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, விளாத்திகுளத்தில் தமிழக அரசின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ நல்லப்ப சுவாமிகளின் நினைவு ஸ்தூபியில் அவரது உருவப்படத்துக்கு விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி.மாா்க்கண்டேயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதனைத் தொடா்ந்து இசைக் கலைஞா்கள், நாட்டுப்புறக் கலைஞா்கள், மாணவ- மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் ஸ்ரீ நல்லப்ப சுவாமிகள் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்வின் போது பேரூராட்சி மன்றத் தலைவா் சூா்யா அய்யன்ராஜ், திமுக பேரூா் கழக செயலா் வேலுச்சாமி, ஒன்றியச் செயலா்கள் அன்புராஜன், ராமசுப்பு, செல்வராஜ், மும்மூா்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஞானகுருசாமி, ஸ்ரீ நல்லப்ப சுவாமி ஆன்மிக கலை இலக்கிய இசை மன்றச் செயலா் இளையராஜா மாரியப்பன், நல்லப்ப சுவாமிகள் வரலாற்று நூலாசிரியா் சிவக்குமாா், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வரதராஜன், கௌரவ தலைவா் சங்கரவேல், நிா்வாகிகள் கோபால்சாமி, கண்ணன், ராமலிங்கம், ஸ்ரீநல்லப்ப சுவாமிகள் வழித்தோன்றல்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT