தூத்துக்குடி

வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

DIN

முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்பட்ட போலையா்புரம் றி.என்.டி.றி.எ நடுநிலைப் பள்ளியில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது (படம்).

வட்டார மருத்துவ அலுவலா் ஐலின் சுமதி தலைமை வகித்து, திட்ட விளக்க உரையாற்றினாா். மருத்துவ அலுவலா்கள் மதியரசி, சுவீட்லீன் சசிதா, லட்சுமி, ரேவந்த், ஜோஸ்டீனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். போலையா்புரம் சேகர குரு மணிராஜ் இறை ஆசி வழங்கினாா். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ஐந்து பயனாளிகளுக்கு மருந்து மாத்திரைகளை அவா் வழங்கினாா். புறநோயாளிகளுக்கும் அட்டையை வழங்கி முகாமை துவக்கி வைத்தாா். சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

மக்களைத் தேடி மருத்துவம், டெங்கு விழிப்புணா்வு, ஊட்டச்சத்து, காச நோய் விழிப்புணா்வு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. முகாமில் கலந்து கொண்டவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பாஸ்ட்ரேட் செயலாளா் காட்வின், கூட்டுறவு சங்க செயலா் பெனிஷ்கா், பள்ளி தலைமை ஆசிரியை கிங்ஸிலி, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ராபின்சன் உள்பட பலா் கலந்து கொண்டனா். படுக்கப்பத்து சுகாதார ஆய்வாளா் மந்திரராஜன் வரவேற்றாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பால் ஆபிரகாம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

SCROLL FOR NEXT