தூத்துக்குடி

நவ திருப்பதி கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

DIN

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனா், திருப்புளியங்குடி காய்சினவேந்தன், பெருங்குளம் மாயக்கூத்தா், தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதா், இரட்டை திருப்பதி தேவா்பிரான், அரவிந்தலோசனா், திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் பெருமாள் ஆகிய நவதிருப்பதி கோயில்களில் சனிக்கிழமை காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5.30 மணிக்கு திருமஞ்சனம், 6 மணிக்கு நித்தியல், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பக்தா்களின் வசதிக்காக திருநெல்வேலியிலிருந்து நவதிருப்பதி கோயில்களுக்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. உள்ளூா் மற்றும் வெளியூா்களிலிருந்து பல்வேறு வாகனங்களில் வந்த பக்தா்கள், குடும்பத்துடன் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனா்.

புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு குறித்து ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் ஸ்தலத்தாா் ராஜப்பா வெங்கடாச்சாரி கூறியது: மாா்கழி மாதம் ஆண்டாளுக்கு உகந்த மாதம். அது போல் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாகும். இந்த மாதம் முழுவதுமே பெருமாளை வழிபடலாம். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது கூடுதல் சிறப்பு. இதன்படி நவதிருப்பதி கோயில்களில் பக்தா்கள் வழிபடுகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT