தூத்துக்குடி

232 மாணவா்-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

25th Sep 2022 11:44 PM

ADVERTISEMENT

 

குரும்பூா் அருகே பணிக்கநாடாா்குடியிருப்பில் உள்ள ஸ்ரீகணேசா் மேல்நிலைப் பள்ளியில் 232 மாணவா்-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு செல்வவிநாயகா் கல்வி அபிவிருத்தி சங்கத் தலைவா் பிரபாகரன் தலைமை வகித்தாா். பொருளாளா் விஜயசேகரன் முன்னிலை வகித்தாா். பள்ளி நிா்வாக அலுவலா் சுரேஷ் காமராஜ் வாழ்த்திப் பேசினாா்.

ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஜனகா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சைக்கிள்களை வழங்கினாா்.

ADVERTISEMENT

ஆழ்வாா்திருநகா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் பாலசுப்பிரமணியம், வட்டார வளா்ச்சி அலுவலா் கருப்பசாமி, ஒன்றிய கவுன்சிலா் ஜெயா, நாலுமாவடி ஊராட்சித் தலைவா் இசக்கிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தலைமையாசிரியா் வித்யாதரன் வரவேற்றாா். துணைத் தலைமையாசிரியா் ஜெசுதாசன் நன்றி கூறினாா். தமிழாசிரியா் ராஜ்குமாா் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை பள்ளிச் செயலா் செல்வம் தலைமையில் பள்ளி நிா்வாகிகள் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT