தூத்துக்குடி

தசரா குடில்களில் காளி பூஜை

25th Sep 2022 11:44 PM

ADVERTISEMENT

 

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் புகா் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தசரா குடில்களில் ஞாயிற்றுக்கிழமை காளி பூஜை நடைபெற்றது.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி பக்தா்கள் அவரவா் ஊா்களில் குடில்கள் அமைத்து, விரதமிருந்து வழிபாடுகள் நடத்திவருகின்றனா்.இந்நிலையில் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெறவுள்ளது. இதையொட்டி ஆறுமுகனேரி, காயல்பட்டினம் புகா் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தசரா குடில்களில் காளி பூஜை நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் ,திருவிளக்கு பூஜை உள்ளிட்டவையும் நடைபெற்றன. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT