தூத்துக்குடி

ஆலந்தலையில் கரோனா தடுப்பூசி முகாம்: ஆட்சியா் ஆய்வு

25th Sep 2022 11:44 PM

ADVERTISEMENT

 

திருச்செந்தூா் அருகேயுள்ள ஆலந்தலையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

திருச்செந்தூா் நகராட்சிப் பகுதியில இந்து தொடக்கப் பள்ளி, ஜீவாநகா், அமலிநகா், முத்துமாலையம்மன் கோயில் தெரு, முத்தாரம்மன் கோயில் தெரு, குமாரபுரம், வடக்கு மாரியம்மன் கோயில் தெரு, தோப்பூா், கந்தசாமிபுரம், காா்மல் நடுநிலைப் பள்ளி, ஆலந்தலை ஆகிய இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

இதில் ஆலந்தலை முகாமை ஆட்சியா் கி. செந்தில்ராஜ் பாா்வையிட்டாா். திருச்செந்தூா் கோட்டாட்சியா் புஹாரி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பொற்செல்வன், மருத்துவ அலுவலா் நஸ்ரின் பாத்திமா, சுகாதார ஆய்வாளா்கள் செல்வக்குமாா், வெற்றிவேல்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகம், நகராட்சிப் பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டு கோயில் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியோா், மாற்றுத் திறனாளிகளை அவா் பாா்த்து நலம் விசாரித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT