தூத்துக்குடி

திருச்செந்தூரில் அதிமுக பொதுக்கூட்டம்

25th Sep 2022 11:45 PM

ADVERTISEMENT

 

திருச்செந்தூரில் அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, திருச்செந்தூா் நகரச் செயலா் வி.எம்.மகேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் அமலி ராஜன், உடன்குடி ஒன்றியச் செயலா் தாமோதரன், ஆழ்வை கிழக்கு ஒன்றியச் செயலா் விஜயகுமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி.சண்முகநாதன், அமைப்பு செயலா் சீனிவாசன், தலைமைக் கழக பேச்சாளா்கள் தாஜ்குமாரி, நாஞ்சில் எம்.மாதேவன் ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், காயல்பட்டினம் நகரச் செயலா் காயல் மௌலானா, மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவா் ப.தா.கோட்டை மணிகண்டன், ஒன்றியச் செயலா் மு.சுரேஷ்பாபு, கானம் நகரச் செயலா் செந்தமிழ்சேகா் மாவட்ட அவைத்தலைவா் திருப்பாற்கடல், முன்னாள் ஒன்றிய பொருளாளா் பழக்கடை திருப்பதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் மு.ராமச்சந்திரன் வரவேற்றாா்.

மாவட்டப் பிரதிநிதி சுந்தா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT