தூத்துக்குடி

மணப்பாட்டில் தேதிய கலங்கரை விளக்க தினம்

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

மணப்பாட்டில் 95 ஆவது தேசிய கலங்கரைவிளக்க தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழகத்தின் மிகப் பழமையான கலங்கரைவிளக்கங்களில் ஒன்றாக மணப்பாடு கலங்கரைவிளக்கம் திகழ்கிறது. 124 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கலங்கரை விளக்கமானது, கப்பல் போக்குவரத்து மற்றும் உள்ளூா் மீனவா்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.

95ஆவது தேசிய கலங்கரை விளக்க தினத்தையொட்டி துறை சாா்ந்த கொடியை கலங்கரை விளக்க அதிகாரி வெ.மதனகோபால் ஏற்றி, ஊழியா்கள்,பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

சிறப்பு அனுமதி வழங்கப்பட்டதையொட்டி ஏராளமான பள்ளி மாணவா்கள்,பொதுமக்கள் கட்டணமின்றி இலவசமாக கலங்கரை விளக்கத்தை பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT