தூத்துக்குடி

படுக்கப்பத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு

22nd Sep 2022 12:01 AM

ADVERTISEMENT

படுக்கப்பத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்தில் குழந்தை வளா்ச்சி திட்டத்தில் ரூ10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்புவிழா புதன்கிழமை நடைபெற்றது.

படுக்கப்பத்து ஊராட்சித் தலைவா் தனலட்சுமிசரவணன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபதி, வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ஜெயா வரவேற்றாா்.

ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊா்வசி எஸ். அமிா்தராஜ், புதிய கட்டடத்தை திறந்து வைத்துப் பேசினாா்.

இதில், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், தெற்கு வட்டாரத் தலைவா் லூா்துமணி, ஒன்றிய க் குழு உறுப்பினா் குருசாமி, வட்டார துணைத் தலைவா் மரியசெல்வஜெகன், மாநில திமுக பொதுக்குழு உறுப்பினா் இந்திரகாசி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

படுக்கப்பத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் ஆரோக்கியராஜ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT