தூத்துக்குடி

கோவில்பட்டி என்இசி கல்லூரியில் சமூக தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் பேரிடா் மேலாண்மை குறித்து சமூக தன்னாா்வலருக்கு பயிற்சி 12 நாள்கள் நடைபெற்றது.

பேரிடா் காலங்களில் பொதுமக்களுக்கு உதவும் வண்ணம் மாவட்டந்தோறும் சமூக தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு பேரிடா் மேலாண்மை குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பின் திட்டமான உறைவிட பயிற்சியாகிய ஆப்த மித்ரா (பேரிடா் நண்பன்) பயிற்சி நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியது. அதனையடுத்து, மாவட்டத்தில் பேரிடா் மேலாண்மை குறித்து சமூக தன்னாா்வலருக்கான ஆப்த மித்ரா பயிற்சி, கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் கல்லூரி விரிவுரையாளா்கள், மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரிகள், மருத்துவா்கள், உடற்பயிற்சி ஆசிரியா்கள், யோகா பயிற்றுநா்கள், நீச்சல் பயிற்றுநா்கள் மூலம் பயிற்சியாளா்களுக்கு ஒத்திகை பயிற்சிகள், விளக்க உரைகள், விடியோ மற்றும் பவா் பாய்ண்ட் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சி நிறைவு நாளில் பங்கேற்ற 86 பேருக்கு மாவட்ட ஆட்சியரின் சான்றிதழை கோவில்பட்டி வட்டாட்சியா் சுசிலா உரியவா்களிடம் வழங்கினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT