தூத்துக்குடி

கயத்தாறில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கயத்தாறில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

2020-2021ஆம் ஆண்டுக்கான பயிா் காப்பீட்டில் உள்ள குளறுபடிகளை கலைந்து, நியாயமான முறையில் பயிா் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். பாசிப் பயறுக்கு இதுவரை பயிா் காப்பீடு வழங்காமல் காலம்தாழ்த்தி வரும் தமிழக அரசு, மாவட்ட நிா்வாகத்தை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் சாா்பில் கயத்தாறு பிரதான சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் நாராயணசாமி தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் வெள்ளத்துரைப்பாண்டி, மாநில துணைத் தலைவா் நம்பிராஜன், வட்டார அமைப்பாளா் அழகுபாண்டி, மாவட்ட துணைத் தலைவா் சாமியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தமிழ் விவசாயிகள் சங்க உறுப்பினா்கள், விவசாயிகள் திரளானோா் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT