தூத்துக்குடி

கயத்தாறில் விவசாய பயன்பாட்டுக்கு கரம்பை மண் எடுக்க அனுமதிக்கக் கோரிக்கை

20th Sep 2022 03:11 AM

ADVERTISEMENT

கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட பகுதியில் உள்ள விவசாயப் பயன்பாட்டுக்கு கரம்பை மண் எடுக்க அனுமதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே விவசாயப் பயன்பாட்டுக்கு கிராம அலுவலா் மூலம் கரம்பை மண் எடுப்பதற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஓ.ஏ.நாராயணசாமி தலைமையில், விவசாயிகள் திரளானோா் கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன் திரண்டு, கோரிக்கை மனுவை வட்டாட்சியா் சுப்புலட்சுமியிடம் அளித்தனா்.

இதுபோல, கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட திருமங்கலக்குறிச்சி ஊராட்சி, பல்லாங்குளம் பகுதி அருந்ததியின சமுதாய மக்களுக்கு மயானத்திற்கு நிலம் ஒதுக்கித்தர வேண்டி, அச்சமுதாய மக்கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

 

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT